Showing posts with label சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். Show all posts
Showing posts with label சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். Show all posts

Thursday, 8 January 2015

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்டம், பொறியியல் பிரிவில் காலியாகவுள்ள 7 சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்கள் இன சுழற்சி
முறையில் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றிதழின் நகல் மற்றும் இன சுழற்சிக்குரிய சான்றின் நகல்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முகவரிக்கு ஜன. 20-ம் பிற்பகல் 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 1.7.2014ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும், பொது போட்டி (பொது), ஆதிதிராவிடர் (அருந்ததியினர் முன்னுரிமை- ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் - பொது, 
பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) பொது, ஆதிதிராவிடர் - பொது ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும்
பொது போட்டி (ஆதரவற்ற விதவை பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (ஆதரவற்ற விதவை பெண்கள்) ஆகிய இனசுழற்சி முறையில் முன்னுரிமை அற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Wednesday, 17 December 2014

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்ய தகுதியானவர்கள் வருகிற 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் கிடையாது.வெள்ளைத் தாளில் எழுதி அனுப்ப வேண்டும். அத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் நகலினை சுயசான்றொப்பம் செய்து 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி பிரிவு, ஆட்சியர் அலுவலம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதியாக ஐ.டி.ஐ. சிவில், டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.