Showing posts with label sslc. Show all posts
Showing posts with label sslc. Show all posts

Tuesday, 29 December 2015

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி நிலையத்தில் 185 ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்பும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Trade Apprentices
பயிற்சி காலம்: 1 ஆண்டு (2016 - 2017)
தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரீசியன்- 35
2. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 25
3. பிட்டர் - 30
4. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 18
5. மெஷினிஸ்ட் - 20
6. மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் (எம்எம்டிஎம்) - 06
7. பெயின்டர் (பொது) - 12
8. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 18
9. வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 18.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழிற் பிரிவிற்கு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக் தொழிற் பிரிவில் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள் (2016 - 2018)
காலியிடங்கள்: Foundryman - 03

Monday, 28 December 2015

SECFL சுரங்க நிறுவனத்தில் சர்வேயர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சத்தீஸ்கர் செயல்பட்டு வரும் South Eastern Coal Fields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 75
பணி: Deputy Surveyor T& S grade ‘C’:
சம்பளம்: மாதம் ரூ.19,035.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS ஆல் அங்கீகரிக்கப்பட்ட சர்வேயர் சான்றிதழை (Surveyor Certificate of Competency) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.01.2016 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி.,எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.secl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Manager (MP),
South Eastern Coalfields Limited,
Post Box No: 60,
Seepat Raod, Bilaspur,
Chhattisgarh. PIN: 495006.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2016.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.01.2016.
மேலும் விவரங்கள் அறிய www.secl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 27 December 2015

அணுசக்தி துறையில் 70 பாதுகாவலர் பணி

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் ராஜா ரமணா தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களு 10, பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Security Officer/A
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ராணுவத்தில் அதிகாரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Security Guard - II- Group C
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 32க்குள்ளும், ஒபிசியினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளை கழித்தால் 30 வயதாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற் திறன் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tuesday, 20 October 2015

நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் பணி

மத்திய அரசின் நேஷ்னல் டெஸ்ட் ஹவுஸ்ஸில் (National Test House) நிரப்பப்பட உள்ள 7 Multi Tasking Staff (Technical) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff (Technical)
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, National Test House (NTH)
Southern Region CSIR Road, Taramani,
Chennai 600113, Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2015
விண்ணப்பதாரர்களின் சந்தேகளுக்கு 044 - 22432374 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.