புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/Admn.1/2014
பணி: Senior Assistant (Group-B)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4.200
தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்ரேஷன் குறித்து தெரிந்திருக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேஷன், அக்கவுண்ட்ஸ், செக்ரட்டேரியல் பணிகளில் ரூ.2,400 தர ஊதியத்தின் அடிப்படையில் 5 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் 2 வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Personal Assistant (Group-B)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4.200
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுகுக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 வருடங்கள் ஸ்டெனோகிராபர் பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேஷன் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Stenographer (Group-C)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு சட்டப்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Finance Officer, JNU என்ற பெயரில் New Delhi-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், Application ID No மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரையும் எழுத வேண்டும்.