Showing posts with label Pudukottai. Show all posts
Showing posts with label Pudukottai. Show all posts

Saturday, 16 August 2014

புதுகை நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தர் பணி: ஆக.18 -ல் பதிவு மூப்பை சரிபார்க்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர்(நபஉசஞ-பவடஐநப) பணிக்கான காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிóந்துரை செய்யப்படுவதை வரும் 18 -ம் தேதி நேரில் வந்து சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொ) வி. வாசுதேவன் வெளியிட்ட தகவல்
மாவட்ட நீதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்படவுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலை சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலை அல்லது தமிழ் மேல்நிலை ஆங்கிலத்தில் கீழ்நிலை அல்லது ஆங்கிலத்தில் மேல்நிலை தமிழ் கீழ்நிலை தோóச்சி பெற்று இந்த அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.08.2014 அன்று உள்ளபடி ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் 35 வயதும் ,மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் 32 வயதும்,  இதர வகுப்பினர் 30 வயதும் இருக்க வேண்டும். இதரப்பிரிவினரைத்தவிர ஏனையோர் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்று பதிவு செய்திருப்போருக்கு  அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை உண்டு. பதிவு மூப்பு:14.8.2014   - தேதி வரை பதிவு செய்துள்ள அனைத்து வகுப்பைச் சோóந்த முன்னுரிமையற்ற பெண் மனுதாரர்கள் மட்டும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.