Showing posts with label என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பணி. Show all posts
Showing posts with label என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பணி. Show all posts

Saturday, 24 January 2015

என்சிசி சான்றிதழ் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் பணி

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் கீழ் அக்டோபர் 2015 குறுகிய கால கமிஷனின் 38-வது கோர்சில் சேர (எஸ்எஸ்சி தொழில்நுட்பம் அல்லாத) என்சிசி 'சி' சான்றிதழ் பெற்ற திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரம்:
என்சிசி - ஆண்கள்:
காலியிடங்கள்: 50.

என்சிசி பெண்கள்:
காலியிடங்கள் 04

வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். (அதாவது விண்ணப்பதாரர்கள் 02.07.1990க்கு முன் மற்றும் 1.7.1996க்குப் பின் பிறந்திருக்கக் கூடாது)
கல்வித் தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் மற்றும் என்சிசி சீனியர் டிவிசனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக்கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிகள் விவரம்:
ஆண்கள் - 157.5 செ.மீ.,
பெண்கள் - 152 செ.மீ.,
கண் பார்வை: 6/6, 6/18.
எடை: ஆண்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள்: 42 கிலோ
உரசும் முட்டுகள், தட்டையான பாதங்கள் இல்லாமல், காதுகள் சாதாரணமாக கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எந்தவொரு நோயும் இல்லாமல் நல்ல உடல் நிலை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு குழுத் தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 5 நாட்கள் நடைபெறும் 2ம் கட்டத்தேர்வில் மருத்துவத்தேர்வும் அதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடைபெறும்.
இறுதியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னி அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ராணுவத்தில் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,400. பயிற்சியின் போது ரூ.21,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அருகிலுள்ள எந்த ஓசி என்சிசி யூனிட்டிலிருந்து என்சிசி 'சி' சான்றிதழ் பெற்றார்களோ அந்த யூனிட்டிற்கு அனுப்ப வேண்டும்.