மத்திய தகவல் மற்றும் தொடர்பு துறை அமைச்சகம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்களில் காலியாக உள்ள டெக்னிக்கல் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் - இ - மிமிமி (சயின்டிஸ்ட்- 'டி') - 07
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டு முன் அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
02. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாப் - இ -மிமி (சயின்டிஸ்ட் 'சி') - 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர், ஐடி, கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி அல்லது எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஐடி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.