Showing posts with label யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC). Show all posts
Showing posts with label யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC). Show all posts

Wednesday, 27 January 2016

இந்திய பொருளாதார, புள்ளியியல் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service  - 15
பணி: Indian Statistical Service    - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 16 January 2015

பாதுகாப்புத் துறையில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய அரசின் பாதுகாப்பு துறைகளான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 375
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: I. National Defence Academy - 320
1. Army - 208
2. Navy - 42
3. Air Force - 70
II. Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55
வயது வரம்பு: 02.07.1996 - 01.07.1999 தேதிக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100 எஸ்பிஐ அல்லது அதன் துணை வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம். SC,ST பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை: உளவியல் திறனறியும் தேர்வு மற்றும் நுண்ணறிவு சோதனை, சிறப்பு தேர்வு குழுவின் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:   www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2015/NDA_I_2015/NDA-1%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.