உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வடக்கு மத்திய ரயில்வேயின் கீழ் பெரோசோபாத் மாவட்டத்தின் தண்டலாவில் உள்ள வடக்கு மத்திய ரயில்வே கல்லூரியில் காலியாக உள்ள பகுதி நேர விரிவுரையாளர் மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 18
01. விரிவுரையாளர் - 04
02, உதவி ஆசிரியர் - 14
01. விரிவுரையாளர் - உயிரியல் - 01
தகுதி: தாவரவியல், விலங்கியல், வாழ்க்கை அறிவியல், உயிரி அறிவியல், மரபியல், நுண்ணுயிரியல், மூலக்கூறு உயிரியல், பிளான்ட் பிசியாலஜி போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டம் மற்றும் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி., படிப்பு மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி மொழியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
02. பொருளியல் - 01
தகுதி: பொருளியல், பயன்பாட்டு பொருளியல், வணிக பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.