ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 8 சீனியர் மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 12/2014
பணி: சீனியர் மேலாளர்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் எம்பிஏ அல்லது PG டிப்ளமோ முடித்திருகக் வேண்டும்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 58,000
பணி: துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.43200 - 66000
தகுதி: 2 வருட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழிலாளர் நலம், சமூகவியல், சமூக சேவை, பெர்சனல் மேனேஜ்மெண்ட் அல்லது பெர்சனல் மேனேஜ்மெண்ட் பிரிவில் எம்பி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.