Showing posts with label CISF. Show all posts
Showing posts with label CISF. Show all posts

Thursday, 19 February 2015

இந்திய துணை ராணுவப் படைகளில் 62,390 கான்ஸ்டபிள் பணி

இந்திய துணை ராணுவப் படைகளான அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF), இந்தோ திபெத் எல்லை காவல் படை (ITBPF), சஷாத்ர சீமா பால் (SSB), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)படை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 62,390 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 62,390. இதில் 8,533 பணியிடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 24,588 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 22,517 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்திற்கு 2,138 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20, 200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் தேர்வு ஆணையம், இந்தத் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது. இதில் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவச் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இறுதித் தேர்வுகள் 04.10.2015 தேதிகளில் நடத்தப்பட்டு அடுத்த வருடம் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

Monday, 29 December 2014

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub-inspector
காலியிடங்கள்: 79
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Head Constable
காலியிடங்கள்: 97
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விளையாட்டு திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தெவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை நேர்முகத்தேர்விற்கு வரும்போது கொண்வர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை IPO-வாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2015

Saturday, 13 September 2014

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணி

மத்திய போலீஸ் படைகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 5 பிரிவுகளைக் கொண்டு மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்தப் படை பிரிவின் தெற்கு பிரிவான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலியாக பல்வேறு பணியிடங்களை பத்தாம் மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன்
மொத்த காலியிடங்கள்: 1085. இவற்றில் 100 இடங்கள் முன்னாள் இராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
பணி: பார்பர்
காலியிடங்கள்: 132
பணி: பூட் மேக்கர்
காலியிடங்கள்: 31
பணி: சமையலர்
காலியிடங்கள்: 401
பணி: கார்பென்டர்
காலியிடங்கள்: 21
பணி: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 02
பணி: மோட்டார் பம்ப் அட்டென்டென்ட்
காலியிடங்கள்: 02
பணி: பெயின்டர்
காலியிடங்கள்: 86
பணி: ஸ்வீப்பர்
காலியிடங்கள்: 191
பணி: வாஷர்மேன்
காலியிடங்கள்: 173
பணி: வாட்டர் கேரியர்
காலியிடங்கள்: 29.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டியினருக்கு 05 வருடங்களும், ஒபிசியினருக்கு 03 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்களின் சேவைக்கேற்றபடி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பார்பர், பூட்மேக்கர், குக், கார்பென்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் பம்ப் அட்டென்டென்ட், பெயின்டர், வாஷர்மேன் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஸ்வீப்பர் மற்றும் வாட்டர் கேரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதிகள்: பொது, எஸ்சி/ ஒபிசியினருக்கான உயரம் : 170 செ.மீ., மார்பளவு: 80 - 85 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கு உயரம்: 162.5 செ.மீ., மார்பளவு: 76 - 81 செ.மீட்டரும், உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
கண் பார்வை திறன்: 6/6, 6/9 என்ற அளவில் கண்பார்வை திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவுகள் அளவிடுதல், உடல் திறன் தேர்வு, டிரேடு தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை 'Assistant Commandant/DDO CISF, SZ HQR, Chennai' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DIG/CISF South Zone Hqrs,
DBlock, Rajaji Bhavan,
Beasant Nagar,
Chennai 600090.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in அல்லதுwww.cisfrecruitment.org என்ற இணையதளங்களை பார்க்கவும்.

Friday, 5 September 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு பாதுகாப்பு படையில் பணி

சி.ஐ.எஸ்.எஃப் (சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ்) என அழைக்கப்படும் மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படையின் பல்வேறு
பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்பர், வாஷர்மேன், ஸ்வீப்பர், குக், வாட்டர் கேரியர், பெயின்டர், எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பணிகள் கான்ஸ்டபிள் பதவியின் கீழ் வருவன.
காலியிடங்கள்: 985
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற் கல்விகளில் சான்றிதழ் படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதிகள்: உயரம்: 170 செ.மீட்டர், மார்பளவு - 80-85 செ.மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.