மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் நாடு முழுவதும் 586 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 47 முதல்வர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நவோதயா பள்ளியில் முதல்வர்
காலியிடங்கள்: 47 (இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600 மற்றும் இதர படிகள். இவை தவிர குடியிருப்பு தொடர்புடைய பணிகளையும் முதல்வர் செய்வதால் அவருக்கு 10 சதவிகித சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., . அரசு, அரசு சார்ந்த, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில்
முதல்வருக்கு இணையான பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 விகிதத்தில் 10 வருட துணை முதல்வராக பணியாற்றியிருக்க வேண்டும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியராக, விரிவுரையாளராக மாதம் ரூ. 6,500-10,500 (திருத்தியமைக்கப்படுவதற்கு முன்), திருத்தியமைக்கப்பட்ட பின் மாதம் ரூ.9,300 - 34,800, தர ஊதியம் ரூ.4,800 என்ற விகிதத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது 12 வருடங்கள் பட்டதாரி ஆசிரியர், மாஸ்டர், விரிவுரையாளராக மாதம் ரூ. 6,500 - 10,500 (திருத்தியமைக்கப்படுவதற்கு முன்), திருத்தியமைக்கப்பட்ட பின் மாதம் ரூ.9,300 - 34,800, தர ஊதியம் ரூ.4,800 என்ற விகிதத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். உறைவிட பள்ளியை 3 வருடங்கள் நிர்வகித்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.