Showing posts with label Oriental Bank of Commerce. Show all posts
Showing posts with label Oriental Bank of Commerce. Show all posts

Monday, 20 April 2015

பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ஓரியண்டல் வங்கியில் பணி

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் நிரப்பப்பட உள்ள 22  Peon-Cum-House Keeper பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ராய்பூர்
சம்பளம்: மாதம் ரூ.7000 - 24,240 + தர ஊதியம் ரூ.2280
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.obcindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Post Box No. 11,
Post Office, Main Post Office,
Raipur, Pin -492001.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Raipur_peon.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.