Showing posts with label IRDA. Show all posts
Showing posts with label IRDA. Show all posts

Wednesday, 3 February 2016

காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரி பதவி

ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அதாரிடி ஆப் இந்தியா(ஐ.ஆர்.டி.ஏ) காலியாக உள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆணையம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மொத்த காலியிடங்கள்: 24
பணி: Junior Officer
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் மற்றும் ஏ.சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., எல்.எல்.பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.ஆர்.டி.ஏ.,வின் இளநிலை அதிகாரி பதவிக்கான தேர்வை தமிழ்நாட்டில் சென்னையிலும், புதுச்சேரியிலும், நாட்டின் பல்வேறு இதர மையங்கள் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_Layout.aspx?page=PageNo2730&flag=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.