Showing posts with label Union Bank of India. Show all posts
Showing posts with label Union Bank of India. Show all posts

Thursday, 26 February 2015

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 49
பணி:  Specialist Officer
பணி மற்றும் கலியிடங்கள் விவரம்:
1. Forex Officer Scale/ Grade (II) - 11
2. Forex Officer Scale/ Grade (I) - 36
3. Economist Scale/ Grade - 02
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:  
1. Forex Officer Grade II பணிக்கு 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
2. Grade I & Economist பணிக்கு 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. Officer Grade II பணிக்கு மாதம் ரூ.19.400 - 28,100.
2. Officer Grade I & Economist பணிகளுக்கு மாதம் ரூ.14,500 - 25.700 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRP201516EnglishNotificationwebsite.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 19 September 2014

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் டீலர், ஈக்விட்டி ஆராய்ச்சி ஆய்வாளர் பணி

பொது துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள டீலர் மற்றும் ஈக்விட்டி ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் விவரங்கள்:
பணி: Dealer (Specialized Segment) - 10
தகுதி: நிதியியல், கணிதம், புள்ளியில், வணிகவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MBA,PGDBM முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.

பணி: Equity Research Analyst - 01
தகுதி: பொருளியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ (நிதியியல்) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 - 43க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRPA201415EnglishWebsite.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.