மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கொல்கத்தா சணல் மேம்பாட்டு இயக்குனரகத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 01.09.14 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கிராமப் பொருளாதாரம், செடி வளர்ப்பு, மரபு வழி பண்பியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கொல்கத்தா விலங்குகள் பாதுகாப்புத் துறையில் தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் துறையில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்