Wednesday 30 March 2016

பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் பணி

இந்திய கடற்படையில் கோர்ஸ் கமென்சிங்-ஜனவரி 2017 பயிற்சியின் கீழ் பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் லாஜிஸ்டிக்ஸ் கேடர் பிரிவு மற்றும் எஜுகேசன் பிரிவில் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆண் - பெண் பட்டதாரி இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19½  -  25க்குள் இருக்க வேண்டும், கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது முடித்திருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.காம், பி.எஸ்சி (ஐ.டி.) இளங்கலை படிப்புடன் நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ படித்தவர்கள், எம்பிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி. (ஐ.டி.) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி. இயற்பியல், கணிதவியல், வேதியியல், எம்சிஏ அல்லது பி.இ அல்லது பி.டெக், எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும், பெண்கள் 152 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நல்ல பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

Monday 28 March 2016

வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கி (நபார்டு வங்கி )

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')
காலியிடங்கள்: 100
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேலாளர் (கிரேடு 'பி')
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 25 - 35க்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.650 + 100  = 750, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு ரூ.750 + 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday 25 March 2016

தேசிய உர ஆலையில் மேலாளர் பணி

தேசிய உரை ஆலையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager (HR)
காலியிடங்கள்: 03
பணி: Manager
காலியிடங்கள்: 02
பணி: Deputy Company Secretary
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் சம்ந்தப்பட்ட பிரிவுகளில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalfertilizer.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 23 March 2016

மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் செயல்பட்டு வரும் Central Marine Fisheries Research Institute -இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகின்றன.
பணி: Bosun - 01சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Mate Fishing Vessel தொழிற்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Skipper Grade-I - 01சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு  தேர்ச்சியுடன் Mate Fishing Vessel தொழிற்பிரிவில் சான்றிதழ் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Motor Driver) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Programme Assistant-Computer) - 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant (Farm Manager) - 01சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agricultural, Horticulture பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணிப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:26.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cmfri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 21 March 2016

பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பல்கலைக்கழ மானியக் குழுவின்கீழ் செயல்பட்டு வரும் National Assessment And Accrediation Councial (NAAC)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/NAAC/2016
பணி: Deputy Adviser - 02பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.37,000 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000

பணி: Assistant Adviser - 10
பயிற்சி காலம் 2 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000

பணி: Assistant Librarian - 01
பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Assistant (Publication) - 01பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Junior Semi Professional Assistant -07பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி Technical Assistant - 01பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Library Assistant - 02பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: Driver - 01பயிற்சி காலம் 1 ஆண்டு
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
விண்ணப்பிக்கும் முறை: http://www.naac.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
National Assessement And Accediation Council (NAAC),
P.B.No.: 1075, Nagarbhavi, Bangalore - 560072
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.naac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday 19 March 2016

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் 137 பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: வாடிக்கையாளர் முகவர் அல்லது பாதுகாப்பு முகவர் (Customer Agent or Security Agent)
காலியிடங்கள்: 137
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி செயல்பாடுகள் குறித்த அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடும் திறனும் மற்றும் உள்ளூர் மற்றும் ஹிந்தி மொழிகளின் அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.
வயதுவரம்பு: 01.03.2016 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,180
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் “Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Air India Staff Housing Old Colony Ground, Kalina, Santa Cruz (E), Mumbai 400 029 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்ரு காலை 8 மணி முதல் 11 மணி வரை
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday 17 March 2016

இசைகலைஞர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் 246 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் காலியாக உள்ள 246 இசைகலைஞர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 246
ஆண்கள் - 221
பெண்கள் - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவியை இசைப்பதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதயின்படி 18 ஆம் தேதிக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் ஆணை அல்லது Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் HaJipur, HQ  - Security என்ற லிங்கில் உள்ள வழிகாட்டுதலின் படி ஏ4 அளவு காகிதத்தில் தயாரித்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
IG-Chief Security Commissioner, East Central Railway, Hajipur, Pin Code - 844101, Bihar.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1456204835297-A1.pdf என்ற இணையதளத லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday 15 March 2016

எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indo Tibetan Border Police (ITBP)
மொத்த காலியிடங்கள்: 570
பணி இடம்: தில்லி
பணி: ஆய்வாளர் (Inspector)
வயதுவரம்பு: 21.03.2016 தேதியின்படி 52க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Admn.Officer (Estt),
Directorate General, ITBP, MHAGovt. of India,
Block-2, CGo Complex, Lodhi Road, New Delhi - 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:21.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/200003060847.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Sunday 13 March 2016

கொல்கத்தா துறைமுகத்தில் 272 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கொல்கத்தா துறைமுகத்தில் 2016 ஆண் ஆண்டுக்கான 272 மேற்பார்வையாளர்கள் மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 272
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: General Equipment Operator - 258
சம்பளம்: மாதம் ரூ.17,900
பணி: Supervisors - 14
சம்பளம்: மாதம் ரூ.24,000
வயதுவரம்பு: 01.02.106 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
 “In the office of Sr. Dy. Manager (P&IR),
Haldia Dock Complex,
Jawahar Tower Building,
Haldia Township,
Purba Medinipur, PIN – 721 607”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:15.03.2016
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=1932&lid=1641 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Saturday 5 March 2016

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு விவசாயத்துறையில் டெக்னீசியன் பணி

மத்திய விவசாயத் துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agricultural Engineering பிரிவில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanic Agricultural Machinery, Mechanic Motor Vehicle, Mechanic Tractor, Mechanic Diesel Engine, Electrician டிரேடில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://srfmtti.dacnet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 3 March 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு பணி

சத்தீஸ்கர் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 35 Principal cadre-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Principal cadre-II
காலியிடங்கள்: 35
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கலிருந்து பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து  5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100
வயது வரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: http://psc.cg.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://psc.cg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday 2 March 2016

பொறியியல் பட்டதாரிகளுக்கு உதவி பொறியாளர் பணி


மேற்கு வங்காள மின் பகிர்மான வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Engineer (Electrical)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.15,600  - 239,100 + தரஊதியம் ரூ.5,400
பணி: Assistant Engineer (Mechanical)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600  - 239,100 + தரஊதியம் ரூ.5,400
தகுதி: பொறியியல் துறையில் எல்கட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18  - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதற்கான செல்லான் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பிரிண்ட் அவுட் எடுத்து United Bank-ல் வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.wbsedcl.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Advertiser,
Post Bag No.781.
Circus Avenue Post Office,
Kolkata - 700 017.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 10.03.2016
விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wbsedcl.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.