Showing posts with label எல்லை பாதுகாப்பு படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணி. Show all posts
Showing posts with label எல்லை பாதுகாப்பு படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணி. Show all posts

Sunday, 27 July 2014

எல்லை பாதுகாப்பு படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணி

எல்லை பாதுகாப்பு படை எனப்படும் Border Security Force (BSF)-ல் நிரப்பப்பட உள்ள 293 துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 293
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sub Inspector (Workshop) - 01
2. Sub Inspector (Master) - 10
3. Sub Inspector (Engine Driver) - 13
4. Head Constable (Master) - 68
5. Head Constable (Engine Driver) - 66
6. Head Constable  (Workshop) - 01
7. Constable (Crew) - 134
வயது வரம்பு:
1 துணை ஆய்வாளர் (மாஸ்டர் & இன்ஜின் ஒட்டுநர்) பணிக்கு 22 - 28க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, ஆவணங்கள் மற்றும் உடல் திறன், துறை தேர்வு மற்றும் நேர்காணல், மருத்துவ பரிசோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. துணை ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ.9300. 34,800 + தர ஊதியம் ரூ.4200.
2. தலைமை காவலர் பணிக்கு மாதம் ரூ.5200. 20,200 + தர ஊதியம் ரூ.2400
3. கான்ஸ்டபிள் பிரிவு (Crew) பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்தும் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://bsf.nic.in/doc/recruitment/r109.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அருகில் உள்ள BSF மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.08.2014
மேலும் விரிவான கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bsf.nic.in/doc/recruitment/r109.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.