இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: RET/28-79/2014/Vol.I
பணி: Junior Telecom Officers
காலியிடங்கள்: 04 (PWD (HI))
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 31.12.2014 தேதியின்படி Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Information Technology, Instrumentation, INdustrial Electronics போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 05.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.