அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் Institute of Minerals - Materials Technology நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டென்ட்: (நிலை-3)
காலியிடங்கள்: 03
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் தட்டச்சில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்.எஸ். ஆபீஸ்-எம்எஸ் வேர்டு, எம்.எஸ்.எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.
பணி: அசிஸ்டென்ட்: (நிலை-3)
காலியிடங்கள்: 02
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் கணினியில் எம்.எஸ். ஆபீஸ், எம்எஸ் வேர்டு, எம்எஸ் எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.
பணி: அசிஸ்டென்ட்: நிலை-3
காலியிடங்கள்: 01
தகுதி: வணிகவியில் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. கணினியில் எம்.எஸ். ஆபீஸ், எம்எஸ் வேர்டு, எம்எஸ் எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.
பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 02
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அல்லது இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். டிகிரி முடித்திருப்பது விரும்பத்தக்கது. கணினியில் எம்.எஸ். ஆபீஸ், எம்எஸ் வேர்டு, எம் எஸ் எக்சல், பவர் பாயின்ட் தெரிந்திருப்பது விரும்பத்தக்க தகுதியாகும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித்தேர்வு, கணினியில் தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.