Showing posts with label tamilnadu employment. Show all posts
Showing posts with label tamilnadu employment. Show all posts

Sunday, 28 December 2014

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Monday, 10 November 2014

இளநிலை அறிக்கையாளர் பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை அணுகலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையில் இளநிலை அறிக்கையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்ட காவல் துறையில் இளநிலை அறிக்கையாளர் பணியிடங்கள் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 தகுதிகள் : கல்வித் தகுதிகள் 10-ம் வகுப்பு மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 2014 ஜூலை 1-ம் தேதி அன்றைய தேதியின்படி (அதிகபட்ச வயது) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 35 வயது, பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 32 வயது மற்றும் இதர வகுப்பினர்களுக்கு 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
 உரிய தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்கள் பதிவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நவம்பர் 14-ம் தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள கொள்ளவும்.
 நேரில் வர இயலாதவர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை கல்விச் சான்றுகள் ஆகியவற்றின் நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்பிடலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.