21.12.2014 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வின் பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு.
1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்
2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A 2 4 1 3
3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை
4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
விடை: B தூது
5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய் பேசினாள்
விடை: D 2 4 1 3
6. "அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று
7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C வயலில் மாடுகள் மேய்ந்தன
8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
விடை: A பொருட்பெயர்
9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று
10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
விடை: C அண்ணன்
11. யாப்பு என்றால் ----------------- என்பது பொருள்
விடை: C கட்டுதல்
12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C இராணி மங்கம்மாள்
13. "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்
14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A 7
15. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A குறிஞ்சிப் பாட்டு
16. "மனித நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B இலெமூரியா
17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்
19. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A வாணிதாசன்
20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விடை: A குளோரோஃபுளுரோ கார்பன்
21. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை: B குமரிலபட்டர்
22. " சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B மணிமேகலை
23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை: B பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D மணிமேகலை
25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை: A 2 1 4 3
26. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B பாரதிதாசன்
27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B இராஜநாகம்
28. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D காயசண்டிகை
29. "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A மதுரை
30. "சதம்" என்பது -------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B நூறு
31. "கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
விடை: D சொல்லின் செல்வன்
32. "சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக் கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்
33. "சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B பாரதிதாசன்
34. பொருத்தமான விடையை எழுதுக: "துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B இராமச்சந்திர கவிராயர்
35. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை: B பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர்-------------------
விடை: A மாணிக்கவாசகர்
37. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B அறிவுக் கடல்
38. "ஜல்லிக்கட்டு" என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர் ---------
விடை: A சி.சு. செல்லப்பா
39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை: C இலக்கணம்
40. "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
41. "முத்தொள்ளாயிரம்" - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A. சேர, சோழ, பாண்டியர்
42. பொருத்துக:
a) சிக்கனம் - சுரதா
b) மனிதநேயம் - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர் தரா பாரதி
விடை: C 3 2 4 1
43. "மணிமேகலை வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்
44. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான "பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B வெ. சாமிநாத சர்மா
45. "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D க. சச்சிதானந்தன்
46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ - அப்துல் ரகுமான்
விடை: C 3 4 2 1
47. பொருத்துக:
a) பூங்கொடி - முடியரசன்
b) கொடி முல்லை - வாணிதாசன்
c) ஆட்டனத்தி ஆதிமந்தி - கண்ணதாசன்
d) பட்டத்தரசி - சுரதா
விடை: C 3 4 1 2
48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C குலசேகராழ்வார்
49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை: B சிலப்பதிகாரம்
50. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை: B மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்