Showing posts with label Stenographer (Grade 'C & D') Examination -2015. Show all posts
Showing posts with label Stenographer (Grade 'C & D') Examination -2015. Show all posts

Friday, 28 August 2015

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு

தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள், மத்திய அரசு துறைகள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவுக்கு அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளயிட்டுள்ளது எஸ்எஸ்சி. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer (Grade 'C & D')
தேர்வு: Stenographer (Grade 'C & D') Examination -2015
காலியிடங்கள் விவரம்:
1. Stenographer (Grade 'C ')  - 50
2. Stenographer (Grade ' D') - 1014
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100, 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும்
கணினியில் தட்டச்சு செய்வதற்கான தகுதி தேர்வில் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.12.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.
எழுத்து தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி.
எழுத்துத் தேர்வில் தவறான பதில்கள் மதிப்பெண் குறைப்பு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி பிரிவினர், அனைத்து பிரிவுகளை சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.09.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.