ஐபோன், ஐபேட் போன்ற புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்தி, உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், இப்போது உலகின் அடுத்த புரட்சி சாதனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், உடலில் அணியும் வகையிலான கணிணிகளே, அடுத்த மின்னணு சாதன புரட்சியாக இருக்கும் என குறிப்பிட்டார். இத்தகைய சாதனங்களை ஆப்பிள் நிறுவனமே வெளியிடும் என எதிர்பார்ப்பதாகவும் குக் தெரிவித்தார்