Showing posts with label நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் 2013. Show all posts
Showing posts with label நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் 2013. Show all posts

Saturday, 30 March 2013

நிக் டி அலிஸியோ: மிக இளைய வயது கோடீஸ்வரன் 2013


தகவல் தொழில்நுட்பத் துறையின் எழுச்சி மனிதனின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மிக இளைய வயதில் கோடீஸ்வரனாவதும் இதில் ஒன்று. facebook தளத்தின் மார்க் ஃஜூக்கர்பர்க் (Mark Zuggerburg) இந்தப் போக்கை தொடங்கி வைத்த நிலையில், இந்த வரிசையில் லண்டனை சேர்ந்த 17 வயது நிக் டி அலிஸியோ (Nick de Aloisio)-வும் இப்போது சேர்ந்துள்ளார். மிகக்குறைந்த வயதில் இவர் செய்த சாதனைகளையும் இதன் பின்னணிகளையும் காணலாம்.
கோடிகளில் சம்பாதிக்கும் பள்ளி மாணவன்:
லண்டனின் புறநகர் பகுதியான விம்பிள்டனில் வசிக்கும் சிறுவன் நிக் டி அலிஸியோ. ஸ்மார்ட் போன்களில் செய்திகளை எளிதாக படிப்பதற்காக இவர் உருவாக்கிய சம்லி அப்ளிகேஷன் என்ற மென்பொருள் பயன்பாடுதான் இவரை உலகளாவிய பிரபலமாக்கியுள்ளது. அதோடு பள்ளியில் படிக்கும் போதே கோடீஸ்வரன் என்ற