Showing posts with label State Bank of India Recruitments 2014. Show all posts
Showing posts with label State Bank of India Recruitments 2014. Show all posts

Tuesday, 9 September 2014

பட்டதாரிகளுக்கு ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மிக அதிகமான கிளைகளுடன் தனது சேவையை சிறப்பாக செய்துவரும் பொதுத்துறை வங்கியாகும். ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பைகானர் போன்ற ஐந்து துணை வங்கிகள் இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த துணை வங்கிகளில் காலியாக உள்ள 2986 புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் 424 பின்னடைவு பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.
பல்வேறு பொதுத்துறை வங்கிகள் பொது எழுத்து தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளுக்கு தனியே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறவும்.
நிறுவனம்: SBI Associate Bank
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 2986
பின்னடைவு பணியிடங்கள்: 424
கிளை வங்கிகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. SBBJ : 350
2. SBH : 900
3. SBM : 500
4. SBP : 100
5. SBT : 1136
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.09.1984 - 01.09.1993 தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.