Showing posts with label ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு. Show all posts
Showing posts with label ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு. Show all posts

Wednesday, 28 May 2014

ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு

அஞ்சல் துறையின் பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
 தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன.
 இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ஆகையால், இந்தத் தேர்வுகான நுழைவுச் சீட்டுகள்  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு துரித அஞ்சல் (ஸ்பீட் போஸ்ட்) மூலம் அனுப்பப்பட உள்ளன.
 தகுதியுள்ள விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் www.tamilnadupost.nic.in வெளியிடப்பட்டுள்ளன.
 மேலும், இந்த விவரங்கள் அந்தந்த மண்டலங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன என்று தமிழக வட்ட தலைமை பொது அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.