தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு 1727 தாற்காலிக உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மண்டல மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் அடிப்படையில் 2,176 பணியிடங்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களை காலிப்பணியிடங்கள் தாற்காலிக முறையில் நிரப்பப்படவுள்ளது.