தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச்சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும். இன்னும் 45 நாட்களில் இது சாத்தியமாக இருக்கிறது. ஆம் ! காபி போடக் கூடிய மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).
இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.
காபி போடுது மட்டுமல்லாது, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, வெப்ப நிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை, பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம்.