Saturday 15 February 2014

இந்திய ரயில்வேயில் 26,567 பணியிடங்கள்(ஐடிஐ, டிப்ளமோ தகுதி) - விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014.

விளம்பர எண்:  Centralised Employment Notice No.01/2014
chennai railway recruitment 2014-2015
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒரே நாளில் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு ஆர்ஆர்பிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சென்னை ஆர்ஆர்பியில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பெங்களூர் ஆர்ஆர்பியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, கொங்கணி ஆகிய மொழிகளிலும், திருவனந்தபுரம் ஆர்ஆர்பியில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம்.
சென்னை ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:
காலியிடங்கள்: 1666. (பொது- 782, எஸ்சி- 347, எஸ்டி- 275, ஒபிசி- 262,) இவற்றில் 160 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:

பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்(Plus 2 tanittervarkal: apply in tatkal)

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் பிப். 17 முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
Plus 2 tanittervarkal: apply in tatkal
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வுத் துறையில் அறிவிக்கப்பட்ட நாள்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, இப்போது விண்ணப்பிக்க விரும்புவோர் தத்கல் அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்குச் சென்று தனித்தேர்வர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேறு இடங்களில் இருந்து ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாது. இந்த சிறப்பு மையங்கள் தொடர்பான விவரத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மண்டலத் தேர்வு துணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்

Friday 14 February 2014

பொது அறிவு வரலாறு

பொது அறிவு வரலாறு
1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை
3. பொருத்துக:
I. கன்வ வம்சம் – 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் – 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் – 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் – 4. புஷ்ய மித்ரம்
அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை
5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை
6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா
7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி
8. ‘புத்த தத்தர்’ யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா
10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை
விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?
அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி
12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
அ. புனே
ஆ. கார்வார்
இ. புரந்தர்
ஈ. ராய்கார்
13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?
அ. அஜாதசத்ரு
ஆ. பிந்துசாரர்
இ. காரவேலர்
ஈ. மயூரசரோனர்
14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?
அ. சமுத்திரகுப்தர்
ஆ. அசோகர்
இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?
அ. கஜினி முகமது
ஆ. குத்புதீன் ஐபெக்
இ. கோரி முகமது
ஈ. அலாவுதீன் கில்ஜி
16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு
அ. நேபாளம்
ஆ. திபெத்
இ. இந்தியா

Monday 3 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% சலுகை

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (மொத்தம் 150-க்கு 90 மதிப்பெண்) பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
அதேசமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியில் நியமிக்கும்போதுதான் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுகிறது என்பதை தெரிவித்துள்ளார்.