டேராடூனில் செயல்பட்டு வரும் இந்தியன் ராணுவ அகாடமியில் தொடங்கவிருக்கும் 140வது கோர்சுக்கும், கேரள மாநிலம் எழிமலையில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படை அகாடமியில் தொடங்கும் கோர்சுக்கும், ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் விமானப்படை அகாடமியில் தொடங்கும் பைலட் பயிற்சி கோர்சுக்கும், சென்னையில் செயல்பட்டு வரும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி (ஆண்கள், பெண்கள்) கோர்சுக்கும் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கு 2015ம் ஆண்டு பிப்.15ம் தேதி ஒருங்கிணைந்த தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இந்தியன் மிலிட்டரி அகாடமி - 200
வயது வரம்பு: 05.12.2014 தேதியின்படி 17 - 22க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.01.1992க்கு முன்னதாகவோ, 01.01.1997க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது).
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இந்தியன் கடற்படை அகாடமி - 45
வயது வரம்பு: 05.12.2014 தேதியின்படி 17 - 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: இந்தியன் விமானப்படை அகாடமி - 32
வயது வரம்பு: 01.01.2016 தேதியின்படி 20 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.2.1992க்கு முன்னதாகவோ 1.1.1996க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
தகுதி: அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் +2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி - 175(ஆண்கள்)
வயது வரம்பு: 17 - 23க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.01.1991க்கும் முன்னரோ, 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி -12 (பெண்கள்)
வயது வரம்பு: 17 - 23க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.01.1991க்கு முன்னரோ 01.01.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.