Showing posts with label Ministry of Finance. Show all posts
Showing posts with label Ministry of Finance. Show all posts

Saturday, 1 November 2014

அமலாக்கத் துறையில் துணை இயக்குநர் பணி

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வருவாய்த்துறையின் அமலாக்கப்பிரிவில் காலியாக உள்ள 95 துணை இயக்குநர் பணியிடங்களை டெபுடேஷன் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை இயக்குநர்
தகுதி: மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது நிகர் நிலை அமைப்புகளில் துணை இயக்குநர் பணிக்கு நிகரான பதவிகளில் தற்போது நிரந்தர அடிப்படையில் பணிபுரிபவர்கள், 5 வருட பணி அனுபவத்துடன் தற்போது இதே ஊதிய விகிதங்களில் பணியாற்றுபவர்கள், இத்துறையில் போதுமான அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்ச்சி முறை: இந்த பணிக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை தெளிவாக நிரப்பி, உரிய சான்றிதழ்களி்ன் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Under Secretary (ED),
Ministry of Finance,
Dept. of Revenue,
Room No. 55, North Block, New Delhi
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி் தேதி: 12.11.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு http://www.enforcementdirectorate.gov.in/vacancy_circular_ என்ற இணையதளத்தை பார்க்கவும்.