Showing posts with label Mailguard. Show all posts
Showing posts with label Mailguard. Show all posts

Wednesday, 6 January 2016

அஞ்சல் துறையில் 439 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 439 Postman, Mailguard பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 439
பணி இடம்: மேற்கு வங்கம்
பணி: Postman, Mailguard
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2000.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://wbcircle.eadmissions.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wbcircle.eadmissions.net/என்ற இணையதளத்தை பார்க்கவும்.