Showing posts with label only tamil india information. Show all posts
Showing posts with label only tamil india information. Show all posts

Monday, 3 June 2013

Aayakalai 64 in Tamil - ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கு ! அன்று தமிழன் வாழ்ந்து காட்டி விட்டுச் சென்ற வாழ்கையைத் தான் , அறிவியல் கண்டுபிடிப்புகள் என இன்றைக்கு தினமும் ஒன்றாய் விஞ்ஞானம் தந்து கொண்டு உள்ளது ! இன்றைக்கு நாம் இந்த அறுபத்து நான்கையும் கற்க முடியாது என்றாலும், இதன் பெயரும் அது எதற்காக பயன்பட்டது என்பதையாவது தெரிந்து கொள்வோமே ! 

Sunday, 26 May 2013

உண்மையான இந்தியன்-real indian of the year 2010-tamilan

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

Friday, 24 May 2013

who is prakash rao of Orissa -பிரகாஷ் ராவ்

இவரல்லவோ.... 'பாரத ரத்னா' பட்டத்துக்குத் தகுந்தவர்.....!

ஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் டீக்கடைக்காரர்.....!

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி