Sunday 30 June 2013

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதா ?

விண்வெளி ஆய்வாளர்கள் வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கோள்களுக்கும் Gliese 667C என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என வாஷிங்டன் விண்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நட்சத்திர scorpious  (தேள்) என்
ற விண்மீன் வெறும் 22 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது போன்ற கோள்கள் இதற்கு முன் மில்கிவே அண்டவெளியில் காணப்பட்டுள்ளது என்று ஆய்வில் பங்கேற்ற அறிவியல் கார்னேஜி நிறுவன விண்வெளி ஆய்வாளர் பால் பட்லர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த அமைப்புகள் சூரியனை சுற்றி நட்சத்திரங்கள் போன்று இருக்கும்
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகவும்  இருக்கும் அதே சமயம் மிகவும் சூடாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment