Thursday 30 April 2015

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி

மகாராஷ்டிர மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் இராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள MTS பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, தொழிற்திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை  The General Manager, Ordnance Factory, Dehu Road, Pune-412101 என்ற டி.டி அல்லது போஸ்ட் ஆர்டராக எடுத்து செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ofdr.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவாயான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, Ordnance Factory, Dehu Road, Pune-412101, Maharastra.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.05.2015
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofdr.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment