Tuesday 29 December 2015

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி நிலையத்தில் 185 ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்பும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Trade Apprentices
பயிற்சி காலம்: 1 ஆண்டு (2016 - 2017)
தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரீசியன்- 35
2. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 25
3. பிட்டர் - 30
4. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 18
5. மெஷினிஸ்ட் - 20
6. மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் (எம்எம்டிஎம்) - 06
7. பெயின்டர் (பொது) - 12
8. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 18
9. வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 18.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழிற் பிரிவிற்கு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக் தொழிற் பிரிவில் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள் (2016 - 2018)
காலியிடங்கள்: Foundryman - 03

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், Foudryman தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படுவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகை மாதம் ரூ.7,036 அல்லது ரூ.7,916 வழங்கப்படும். பயிற்சி கால அளவைப் பொறுத்து உதவித்தொகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்
வயது வரம்பு: 15.04.1995 - 15.04.2002க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ராணுவத்தினரின் வாரிதாரர்களுக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.4.2016 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.
உடற் தகுதிகள்: குறைந்தபட்ச 137 செ.மீட்டர் உயரமும், 25.4 கிலோ எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: விசாகப்பட்டினம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Officer-in-Charge,
(For Apprenticeship Enrolment),
Naval Dockyard Apprentices School,
VM Naval Base S.O., Post Office,
Visakhapatnam- 530 014.
ANDHRA PRADESH
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.12.2015.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2016.
பயிற்சி தொடங்கும் தேதி: 15.04.2016.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் அறிய http://indiannavy.nic.in/content/naval-dockyard-visakhapatnam என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment