Tuesday 25 November 2014

1727 தாற்காலிக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பணியிடங்கள்: விண்ணப்பிக்க டிச.1 கடைசி

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு 1727 தாற்காலிக உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மண்டல மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் அடிப்படையில் 2,176 பணியிடங்களுக்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர்களை காலிப்பணியிடங்கள் தாற்காலிக முறையில் நிரப்பப்படவுள்ளது.

36 சிறப்பு பிரிவுகள்:
மயக்கவியல், உடற்கூறுயியல், நோயியல், உயிரி வேதியல், சர்க்கரை நோய் சிகிச்சை, தடயவியல் மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை, மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, இதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட 36 சிறப்புப் பிரிவுகளில் மொத்தம் 1727 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை மருத்துவம் பயின்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு பெறாத நிலையில், முதுநிலை டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இணையதளம்:
இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது. முதுநிலை மருத்துவப் படிப்பில் அவரவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 1-ஆம் தேதி கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in

No comments:

Post a Comment