Tuesday 23 December 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-IV: பொதுத்தமிழுக்கான விடை

21.12.2014 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-IV தேர்வின் பொதுதமிழ் பகுதி வினாவுக்கான விடைகள் பின்வருமாறு.
1. 'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
விடை: C கண்களால் நகுபவள்

2. பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக
a) குறிஞ்சி - கிழங்ககழ்தல்
b)முல்லை - வரகு விதைத்தல்
c) மருதம் - நெல்லரிதல்
d) நெய்தல் - உப்பு விற்றல்
விடை: A  2 4 1 3

3. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
விடை: A பண்புத் தொகை

4. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
விடை: B  தூது

5. பொருத்துக:
a) வினைத்தொகை - செய்தொழில்
b) உவமைத் தொகை - மதிமுகம்
C) உம்மைத் தொகை - நாலிரண்டு
d) அந்மொழித் தொகை - பவள வாய் பேசினாள்
விடை: D  2 4 1 3

6. "அவன் உழவன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
விடை: B குறிப்பு வினைமுற்று

7. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
விடை: C  வயலில் மாடுகள் மேய்ந்தன

8. பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
விடை: A  பொருட்பெயர்

9. பொன்னியிடம் தேன்மொழி தான் மறுந ாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகை தொடர்?
விடை: B அயற்கூற்று

10. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க.
விடை:  C  அண்ணன்

11. யாப்பு என்றால் ----------------- என்பது பொருள்
விடை:  C கட்டுதல்

12. நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
விடை: C  இராணி மங்கம்மாள்

13. "உலகின் எட்டாவது அதிசயம்" எனப் பாராட்டப்படுபவர்
விடை: C கெலன் கெல்லர்

14. திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
விடை: A  7

15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
விடை: A  குறிஞ்சிப் பாட்டு

16. "மனித நாகரிகத்தின் தொட்டில்" என அழைக்கப்படுவது எது?
விடை: B  இலெமூரியா

17. குமரகுருபரர் எழுதாத நூல்
விடை: C திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

18. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: C இராமநாதபுரம்

19. தமிழகத்தின் "வேர்ட்ஸ்வொர்த்" என்று புகழப்படுபவர்
விடை: A  வாணிதாசன்

20. குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் -------------- உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
விடை:  A குளோரோஃபுளுரோ கார்பன்

21. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
விடை:  B  குமரிலபட்டர்

22. " சீர்திருத்தக் காப்பியம்" என்று பாராட்டப்படுவது
விடை: B  மணிமேகலை

23. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
விடை:  B  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி

24. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
விடை: D  மணிமேகலை

25. பொருத்துக:
a) நான்மணிமாலை - சிற்றிலக்கியம்
b) மலரும் மாலையும் - கவிதை
c) நான்மணிக்கடிகை - நீதிநூல்
d) தேம்பாவணி - காப்பியம்
விடை:  A  2 1 4 3

26.  "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - யார் கூற்று?
விடை: B  பாரதிதாசன்

27. கூடுகட்டி வாழும் பாம்பு எது?
விடை: B   இராஜநாகம்

28. மணிமேகலையில் விருச்சக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
விடை: D  காயசண்டிகை

29. "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்னும் புகழ்மிக்க நகரம்
விடை: A  மதுரை

30. "சதம்" என்பது -------------- பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
விடை: B   நூறு

31. "கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்.."
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
விடை: D   சொல்லின் செல்வன்

32. "சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" எனக் கூறியவர்? -
விடை: B விவேகானந்தர்

33. "சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்" - இவ்வடியைப் பாடியவர்
விடை: B  பாரதிதாசன்

34. பொருத்தமான விடையை எழுதுக: "துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்" -
விடை: B  இராமச்சந்திர கவிராயர்

35. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" - என்று கூறியவர்
விடை:  B  பொன்முடியார்
36. அழுது அடியடைந்த அன்பர்-------------------
விடை: A  மாணிக்கவாசகர்

37. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த "ஞானசாகரம்" இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
விடை: B  அறிவுக் கடல்

38. "ஜல்லிக்கட்டு" என்னும் எருதாட்டத்தை வைத்து "வாடிவாசல்" எனும் நாவலை எழுதியவர் ---------
விடை: A சி.சு. செல்லப்பா

39. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
விடை:  C   இலக்கணம்

40. "தமிழ் உரைநடையின் தந்தை" எனப் மெச்சத் தகுந்தவர்
விடை: A  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்

41. "முத்தொள்ளாயிரம்" - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
விடை: A.  சேர, சோழ, பாண்டியர்

42. பொருத்துக:
a) சிக்கனம்  - சுரதா
b) மனிதநேயம்  - ஆலந்தூர் கோ. மோகநரங்கம்
C) காடு - வாணிதாசன்
d) வேலைகளல்ல வேள்விகளே - கவிஞர் தரா பாரதி
விடை: C  3  2  4  1

43. "மணிமேகலை வெண்பா"வின் ஆசிரியர் யார்?
விடை: B பாரதிதாசன்

44. 1942-ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான "பர்மா வழி நடைப்பயணம்" நூலின் ஆசிரியர்
விடை: B  வெ. சாமிநாத சர்மா

45.  "ஆனந்தத்தேன் நூலின் ஆசிரியர்
விடை: D  க. சச்சிதானந்தன்

46. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
a) விடுதலைக்கவி - பாரதியார்
b) திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
c) கவிஞரேறு - வாணிதாசன்
d) கவிக்கோ  - அப்துல் ரகுமான்
விடை: C  3  4  2  1

47. பொருத்துக:
a)  பூங்கொடி - முடியரசன்
b)  கொடி முல்லை - வாணிதாசன்
c)  ஆட்டனத்தி ஆதிமந்தி - கண்ணதாசன்
d)  பட்டத்தரசி - சுரதா
விடை: C  3  4  1  2

48. வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ---------
விடை: C  குலசேகராழ்வார்

49. "பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகள் ிடம் பெற்ற நூல்
விடை:  B  சிலப்பதிகாரம்

50.  திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளிட்டவர்
விடை:  B மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்


51. வெற்பு, சிலம்பு, பொருப்பு - ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
விடை: B  மலை

52.  "நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் ருகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே"
விடை: D  காட்டுக் கோழி

53. "முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" - இதில் மகடூ என்பது ------------
விடை: C  பெண்

54. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
விடை: B  35

55. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
விடை: C  தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9

56. ஐ, ஔ ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
விடை: D சந்தியக்கரம்

57. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
விடை: C கதவு

58. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் "ஒரு பொருட் பன்மொழிச்" சொல்லைத் தேர்க.
விடை: A  மீமிசை ஞாயிறு

59."பெறு" என்று வேர்ச்சொல்லின் விணையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
விடை: D  பெறுபவன்

60. பொருத்துக:
a) இலக்கணமுடையது - நிலம்
b) மங்கலம் - இறைவனடி சேர்ந்தார்
c) இலக்கணப் போலி  - புறநகர்
d) இடக்கரடக்கல் - கால் கழுவி வந்தான்
விடை: B  4  3  1  2

61. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
விடை: D  மொழிமாற்றுப் பொருள்கோள்

62. பொருள் தேர்க:
அங்காப்பு - என்பது
விடை: D  வாயைத் திறத்தல்

63. வினைமுற்றை தேர்க
விடை: D படித்தான்

64. தவறான ஒன்றை தேர்க
விடை: D  இல

65. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
விடை: C பாரதிதாசன்

66. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
விடை: B  ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு

67. காந்தியடிகளை "அரை நிருவாணப் பக்கிரி" என ஏளனம் செய்தவர்.
விடை: A  சர்ச்சில்

68. "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன" - இதனை பாடிய கவிஞர் யார்?
விடை: B  வல்லிக்கண்ணன்

69. கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர் யாவர்?
விடை:  A  இரட்டையர்

70. இந்திய அரசியலில் சாணக்கியர் -------------
விடை:  C   இராஜகோபாலாச்சாரியார்

71. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்
விடை A   இரட்சணிய யாத்திரிகம்

72. "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
விடை: B   பாரதிதாசன்

73. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
விடை:  A  பரிதிமாற் கலைஞர்

74. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
விடை: C  சமணரால் இயற்றப்பட்டன

75. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்
விடை: D  ஆறுமுக நாவலர்

76. இதழ், நா, பல், அண்ணம் - இவை
விடை: D ஒவிப்பு முனைகள்

77. "ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்" எனப் போற்றப்படுபவர்
விடை: D  இராமானுஜர்

78. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது ------------------- நூலின் புகழ்மிக்க தொடர்
விடை: A   திருமந்திரம்

79.  மருத நிலத்திற்குரிய தெய்வம்
விடை: A   இந்திரன்

80. "தாண்டக வேந்தர்" என அழைக்கப்படுபவர் யார்?
விடை:  B  திருநாவுக்கரசர்

81. "தேசியம் காத்த செம்மல்" - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
விடை: A   பசும்பொன் முத்துராமலிங்கர்

82. "சின்னச் சீறா" என்ற நூலை எழுதியவர்
விடை: C பனு அகமது மரைக்காயர்

83. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை: D  நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

84. "ஆ" - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
விடை:  A   குறிஞ்சி

85. "கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
விடை:  A  தாவீது

86.
இதன் பட்டையை அரைத்துச் சடவினால் முரிந்த எளும்பு விரைவில் கூடும்
விடை: A  முருங்கைப் பட்டை

87. "வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்
விடை: B  பசும்பொன் முத்துராமலிங்கர்

88. பட்டியல் I -ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் -II-ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் சரியான விடையைத் தேர்க.
a) First deserve, then desire - மூடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
b) Tit for tat  - பழிக்குப் பழி
c) Work is worship - செய்யும் தொழிலே தெய்வம்
d)Little strokes fell great oaks  - அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
விடை:  B  3  4  2  1

89. பொருத்துக: - சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்        பொருள்
a) விசும்பு -  வானம்
b) மருப்பு  -  தந்தம்
c) கனல்   -  நெருப்பு
d) களிறு  - யானை
வினை: A  2  1  4  3

90. திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
விடை: D  ஜி.யு. போப்

91. "கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
விடை: B  எஸ். வையாப்புரிப் பிள்ளை

92. பம்மல் சம்மந்த முதலியார எழுதாத நாடகம்
விடை: C   பவளக்கொடி

93. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
விடை: B   ஜி.யு. போப்

94. பொருத்துக
      நூல்               -     ஆசிரியர்
a) ஆசாரக்கோவை     -  பெருவாயின் முள்ளியார்
b) கார் நாற்பது         - கண்ணன் கூத்தனார்
c) முதுமொழிகாஞ்சி   - கூடலூர் கிழார்
d) நான்மணிக்கடிகை  - விளம்பி நாகனார்
விடை:  B  4  3  1  2

95  பொருத்துக:
a)  திருநாவுக்கரசர் -   4, 5, 6 திருமுறை
b)  சம்பந்தர்         -  முதல் மூன்று திருமுறை
c)  சுந்தரர்           -  ஏழாம் திருமுறை
d) மாணிக்கவாசகர் -  எட்டாம் திருமுறை
விடை:  A  4  3  2  1

96. பொருந்தாத இணையை கண்டறி
விடை: B  ஞானரதம் - கல்கி

97. "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" என்ற நூலைத் தொகுத்தவர்
விடை: C   ஜி.யு.போப்

98. தமிழ்ப் பேரகராதி - "லெக்சிகன்" (Lexicon) உருவாக்கியவர்
விடை: A  எஸ். வையாபுரிப்பிள்ளை

99. தமிழிசைக்கருவி "யாழ்" பற்றி பலகாலம் ஆராய்ந்து "யாழ் நூல்" இயற்றியவர்
விடை: B  விபுலானந்தர்

100. பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
விடை: B  சுத்தானந்த பாரதியார்

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் வெளியிடப்படும் விடைகளே இறுதியானது.

No comments:

Post a Comment