Friday 1 August 2014

பிஎட் பட்டதாரிகளுக்கு நவோதயா பள்ளிகளில் முதல்வர் பணி

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் நாடு முழுவதும் 586 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 47 முதல்வர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நவோதயா பள்ளியில் முதல்வர்
காலியிடங்கள்: 47 (இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது).
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600 மற்றும் இதர படிகள். இவை தவிர குடியிருப்பு தொடர்புடைய பணிகளையும் முதல்வர் செய்வதால் அவருக்கு 10 சதவிகித சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., . அரசு, அரசு சார்ந்த, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில்
முதல்வருக்கு இணையான பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 விகிதத்தில் 10 வருட துணை முதல்வராக பணியாற்றியிருக்க வேண்டும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியராக, விரிவுரையாளராக மாதம் ரூ. 6,500-10,500 (திருத்தியமைக்கப்படுவதற்கு முன்), திருத்தியமைக்கப்பட்ட பின் மாதம் ரூ.9,300 - 34,800, தர ஊதியம் ரூ.4,800 என்ற விகிதத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது 12 வருடங்கள் பட்டதாரி ஆசிரியர், மாஸ்டர், விரிவுரையாளராக மாதம் ரூ. 6,500 - 10,500 (திருத்தியமைக்கப்படுவதற்கு முன்), திருத்தியமைக்கப்பட்ட பின் மாதம் ரூ.9,300 - 34,800, தர ஊதியம் ரூ.4,800 என்ற விகிதத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். உறைவிட பள்ளியை 3 வருடங்கள் நிர்வகித்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 30.06.2014 தேதியிலிருந்து 35 - 45க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் புதுதில்லியில் நடைபெறும். தேர்வு வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை 'DDO, NVS Hqrs'என்ற பெயருக்கு உ.பி., நொய்டாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி.,
பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Assistant Commissioner,
(Estt.III), Navodaya Vidyalaya
Samiti, Hqrs, B15,
Institutional Area, Sector62,
Gautam Budha Nagar, Noida Dist,
Pin : 201 307.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2014

No comments:

Post a Comment