Wednesday 7 May 2014

ரயில்வே கல்லூரியில் விரிவுரையாளர் பணி

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வடக்கு மத்திய ரயில்வேயின் கீழ் பெரோசோபாத் மாவட்டத்தின் தண்டலாவில் உள்ள வடக்கு மத்திய ரயில்வே கல்லூரியில் காலியாக உள்ள பகுதி நேர விரிவுரையாளர் மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 18
01. விரிவுரையாளர் - 04
02, உதவி ஆசிரியர்  - 14
01. விரிவுரையாளர் - உயிரியல் - 01
தகுதி: தாவரவியல், விலங்கியல், வாழ்க்கை அறிவியல், உயிரி அறிவியல், மரபியல், நுண்ணுயிரியல், மூலக்கூறு உயிரியல், பிளான்ட் பிசியாலஜி போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டம் மற்றும் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி., படிப்பு மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி மொழியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
02. பொருளியல் - 01
தகுதி: பொருளியல், பயன்பாட்டு பொருளியல், வணிக பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

03. வணிகவியல் - 01
தகுதி: வணிகவியல், காஸ்ட் அக்கவுன்டிங், பைனான்சியல் அக்கவுன்டன்சி போன்ற ஏதாவதொரு துறையில் முதுநிலை பட்டம் மற்றும் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி., படிப்பு மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி மொழியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
04. வரலாறு மற்றும் சமூகவியல் - 01
தகுதி: வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
05. உதவி ஆசிரியர்: இசை மற்றும் வாய்ப்பாடு, உடற்கல்வி, கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் மற்றும் புவியியல், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம்,
இந்தி, இந்தி மற்றும் ஆங்கிலம், ஆங்கிலம்,
06. ஆரம்ப பள்ளி ஆசிரியர் - 02
தகுதி: +2 முடித்து ஆசிரியர் பயிற்சி படிப்பு அல்லது பி.எட்., மத்திய அரசு அல்லது மாநில அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் போதிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ncr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை அட்டெஸ்ட் பெற்று கூழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி மற்றும் நேர்முகத் தேர்வு பெறும் முகவரி:
The Principal,
North Central Railway College,
Tundla District, Firozabad,
PIN: 283204.
UTTAR PRADESH.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் விவரம்:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு - 21.05.2014 காலை 8 மணி.க்கும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு - 21.05.2014 பிற்பகல் 12.30 மணிக்கும். உதவி ஆசிரியர்களுக்கு 22.05.2014 காலை 8 மணிக்கும் நேர்முகத்தேர்வு மேற்குறிப்பிடப்பட்ட முகவரியில் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.5.2014.

No comments:

Post a Comment