Tuesday 23 July 2013

Indian student discovered the smart street lights (இந்திய மாணவன் கண்டுபிடித்த ஸ்மார்ட் தெரு விளக்குகள்!!!!)

மே மாத வெயிலில் கூட காலை 10 மணிக்கும் மேல் வீணாக எரியும் தெரு விளக்குகளை நம்மூரில் நாம் நிறைய முறை பார்த்திருப்போம். இப்படி பொறுப்பற்றவர்களுக்கு சிந்தன் ஷா என்று வெளிநாடு வாழ் இந்தியர் கண்டுபிடித்துள்ள நவீன தொழில்நுட்பம் பொருந்திய தெருவிளக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லலாம்.
அப்படி என்ன சிறப்பு அந்த தெரு விளக்கில் என்கிறீர்களா? இவர் கண்டுபிடித்துள்ள தெரு விளக்குகள் தெருக்களில் மக்கள் நடமாடும் இருக்கும் போது மட்டுமே ஒளிரும்.
இந்த ஒளி அமைப்பின் பெயர் ட்வைலைட் (Tvilight). இது, புத்திசாலித்தனமான எல்.ஈ.டி (LED) லைட்டிங் முறையாகும்.
சிந்தன் ஷா நெதர்லாந்தை சேர்ந்த டெல்ஃப்ட் யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி (Delft University of Technology)-யில் படிக்கும் மாணவராவார். இவர் சிட்டிசென்ஸ் (“CitySense”) என்ற ஒரு சென்சாரை வடிவமைத்துள்ளார். இந்த சிட்டி சென்ஸ் சுற்றிவர, 360 டிகிரி-யிலும் ஆட்கள் நடமாட்டத்தை திறன் பட ஆராய்கிறது.

இந்த சிட்டிசென்ஸ்-க்கு 2 முக்கிய பணிகள் உண்டு-முதலாவதாக, இது ஆட்கள் இல்லாத நேரத்தில் மங்கலாக மாறிக் கொள்ளும்.இரண்டாவதாக, ஆட்கள், சைக்கிள் அல்லது கார்கள் போன்ற வாகணங்கள் வரும் போது மட்டும், அவர்கள் இருளில் நடமாடாத அளவிற்கு, அதன் முழு திறனுக்கு ஒளிரும்.இந்த ட்வைலைட் விளக்குகள் நெட்வொர்க், ப்ளக்-அண்ட்-ப்ளே (plug-and-play sensor), என்ற பிரத்யேக ஒருங்கிணைந்த சென்ஸார் நெட்வொர்க் கொண்டது.

இது, ஆட்கள் நடமாடும் போது, ஒளிருவது மட்டுமல்லாமல், பக்கத்தில் இருக்கும் விளக்குகளுக்கும் கம்பியில்லா சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது, வழக்கமான விளக்குகள் மற்றும் புதிய எல்.ஈ.டி விளக்குகளிலும் பொருத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில் நுட்பமானது, மின்சார செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கரியமில வாயு மாசு வெளிப்பாடு ((CO2) emissions)-களையும் 80 சதவீதம் வரையிலும், பராமரிப்பு செலவுகளை 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
இது, மனிதர்கள் மற்றும் எலி, பூனை போன்ற சிறிய மிருகங்கள் இடையே உள்ள வேறுபாட்டை பகுத்தறிய கூடியது. இந்த திறனால், அது அடிக்கடி தேவையில்லாமல் ஒளிர்வதையும் தவிர்த்துக் கொள்கிறது.
இந்த ட்வைலைட் விளக்குகள் நெட்வொர்க்கானது, நெதர்லாந்திலுள்ள 4 நகராட்சிகளிலும், ஐயர்லாந்திலுள்ள ஒரு நகராட்சியிலும் நடைமுறையில் உள்ளது.
சமீப காலமாக, இஸ்ரேல், துருக்கி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இந்த தொழில் நுட்பத்தை பற்றியும் அதை அதை அவரவர் நாடுகளில் அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால், உலக நாடுகளின் தேவைகளை தன்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை” என்றும் சிந்தன் ஷா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment