Friday 18 January 2013

சென்னை மெட்ரோ ரயிலில் பணிகள்

தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது..
ஜப்பானிய வங்கியின் நிதி உதவியுடன் சுமார் 16,000 கோடி ரூபாய் செலவில் சென்னையில் தயாராகி வருகிறது மெட்ரோ ரயில் போக்குவரத்து. வரும் 2015 - 2016 நிதியாண்டில் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பல்வேறு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கைக்குத் தயாராகி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடங்கி, சென்னை மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்தபிறகு நடைபெறும் நிர்வாகம், பராமரிப்பு என பல்வேறு நிலைகளில், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள பணிகள் குறித்த முழு விவரங்களுக்கு www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

மெட்ரோ ரயில் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், அவற்றுக்கும் விண்ணப்பிக்கும் முறைகள்.
Station Controller, Train Operator, Junior Engineer ஆகிய பணிகளில் மொத்தம் 244 பணியிடங்கள் உள்ளன. Mechanical, Electrical, Electronics, Civil ஆகிய பிரிவுகளில் Junior Engineer பணிக்கு மொத்தம் 210 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதேபோல, Mechanical, Electrical, Electronics, Civil, Plumbing, Blacksmith, Welding, Information Technology ஆகிய பிரிவுகளில் மொத்தம் 265 காலிப் பணியிடங்கள் உள்ளன.
மூன்று நிலைகளையும் சேர்த்து மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 719 ஆக இருக்கிறது. இவற்றில் அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும். இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தபாலில் அனுப்ப விரும்புவோர் பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களைப் பெறவும், கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் www.chennaimetrorail.gov.in என்ற இணைய தளத்தைக் காணவும்.

No comments:

Post a Comment