Friday 18 January 2013

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு பயிற்சி

சென்னை ஐ.ஐ.டியில் கோடைகால Fellowship Programme-ல் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
பி.இ, பி.டெக், பி.எஸ்.சி பொறியியல் மற்றும் ஒருங்கிணைந்த எம்.இ, எம்.டெக் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும், எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மூன்று ரேங்குகள் பெற்ற, சிறந்த கல்வி பின்னணி உள்ளவர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த ஆராய்ச்சி பயிற்சியின் போது, 6,500 ரூபாய் உதவித் தொகையைாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பத்துக்கு www.iitm.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்

No comments:

Post a Comment