Wednesday 17 February 2016

கரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பணி

கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி தமிழ்நாடு பொது சார்நிலை பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பத்துடன் (Self Attestation)  இணைத்து பதிவு அஞ்சலில் (ஒப்புகை அட்டையுடன்) அனுப்ப வேண்டும். 
சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி தேர்வுக்கு இந்நீதிமன்ற இணையதளத்தள வலைதளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேரில் கலந்துகொள்ளவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.1/2016
பணி: முதுநிலை கட்டளைபணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: ஜெராக்ஸ் ஆபரேட்டர் - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடன் இலகு ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று அவை நடைமுறையில் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவுக் காவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 = 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மசால்ஜி - 02
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.02.2016 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தாந்தோன்றிமலை, கரூர் - 639 007
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://ecourts.gov.in/sites/default/files/Notification%20and%20Application%20both%20tamil%20and%20english_0.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment