Saturday 30 March 2013

3 பேருடன் விண்ணுக்குச் செல்கிறது சோயுஸ் 2013


ரஷ்யாவின்  சோயுஸ் (Soyuz) விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் நாளை விண்ணுக்குச் செல்கிறது.
எக்ஸ்பெடிஷன் 35 (Expedition 35) எனப்படும் விண்வெளிப் பயணித்திற்கு செல்ல உள்ள சோயுஸ் விண்கலம், கஜகஸ்தானிலுள்ள பிகானீர் ஏவுதளத்திற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய நேரப்படி இந்த ராக்கெட் மார்ச் 29, அதிகாலை 2.13 மணிக்கு ஏவுதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த விண்கலத்தில் செல்லும் வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில், ஐந்தரை மாதங்கள் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள உள்ளனர். பைகானோர் காஸ்மோட்ரோம் ஏவதளத்திலிருந்து, இவர்கள் 6 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையம் சென்றடைவர்.

No comments:

Post a Comment