Monday 1 April 2013

அடுத்த 2வாரங்களுக்கு இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கும்? 2013


அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இந்தியாவில் இணையதள சேவை பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஐரோப்பா இடையே கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள இணைய தள கம்பிவடம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதால், இணைய தள சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வங்கதேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான், எகிப்து, இத்தலி, ப்ரான்ஸ் ஆகியவற்றை கடல் வழியே இணைக்கும் கம்பி வடம் மற்றும் மும்பை, கராச்சி, லெபனான் வழியாக ப்ரான்சை இணைக்கும் கம்பி வடம் ஆகியவற்றில் கடலுக்கு அடியில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவற்றில் பல கோளாறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இணையதள சேவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் இணைய சேவை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சர்வதேச அளவிலான இரண்டு இணைய தள நிறுவனங்கள் இடையேயான தொழில் போட்டி காரணமாக இது நடந்ததாகவும், கடலுக்கு அடியில் கம்பி வடத்தை துண்டிக்க முயன்றதாக எகிப்து கடற் படையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment