Tuesday 7 May 2013

ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் : முதலமைச்சர் ஜெயலலிதா

ஸ்ரீரங்கம் தொகுதியில் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து லாபகரமாகவும், பல விருதுகளை பெற்றுள்ளதுமான தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் காகிதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதன் மூலம் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட, இரு புறமும் மேற் பூச்சு செய்யப்பட்ட அடுக்கு காகித அட்டை, தயாரிக்கும் ஒரு புதிய ஆலை சுமார் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன இயந்திர வசதிகளுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை-மணப்பாறை மாநில
நெடுஞ்சாலையை ஒட்டிய  மணப்பாறை வட்டத்தில் உள்ள மொண்டிப்பட்டி வருவாய் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள வறட்சியான பகுதியில் சுமார் 989 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கான பணிகள் 2013-14 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்கப்படும்.
இதன் மூலம், சுமார் 2000 பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு உருவாகும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment