Sunday 28 June 2015

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வி பிரிவில் பணி

இந்திய ராணுவ கல்வி பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டம் பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (Army Education Corps (AEC))
காலியிடங்கள் விவரம்:
எம்.ஏ பட்டதாரிகள் - 10
எம்.எஸ்சி பட்டதாரிகள் - 06
எம்.ஏ (மொழிகள்) பட்டதாரிகள் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,400 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 23 - 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1989 - 01.01.1993க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், த்துவ இயல், உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், கணிதம், மண்ணியல், நானோ அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.காம், எ.சி.ஏ முடித்திருக்க வேண்டும். அல்லது Chinese, Tibetan, Burmese,Pushto,Dari & Arabic மொழிகளில் ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுவர்.
நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2015, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் 2 கணினி பிரதியை எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியின் கையெப்பம் பெற்று நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment