Friday 6 December 2013

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி

வங்கிகளின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான பாரதிய ரிசர்வ் வங்கி, நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செக்யூரிட்டிகளுக்கான உதவி மேலாளர் பணி
மொத்த காலியிடங்கள்: 74
காலியிடங்கள் விவரம்: ரிசர்வ் வங்கியில் - 32, நோட் முத்ரன் லிமிடெட்டில் - 42

கல்வித்தகுதி: ரிசர்வ் வங்கி பணிக்கு இந்திய ராணுவத்தின் முப்படை பரிவுகளில் ஏதேனும் ஒன்றில் கமிஷன்ட் சர்வீஸ் அதிகாரி பணியிலோ அல்லது
துணை ராணுவத்தில் உதவி கமாண்டோ பணியிலோ 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நோட்முத்ரன் நிறுவன பணிக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பிரின்டிங் டெக்னாலஜி போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ரிசர்வ் வங்கி பணிக்கு 17.12.2013க்குள்ளும், நோட்முத்ரன் நிறுவன பணிக்கு 09.12.2013க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை முழுமையான விவரங்கள் அறிய www.brbnmpl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment