Thursday 2 July 2015

மத்திய அரசு நிறுனத்தில் உதவியாளர் & ஸ்டெனோ பணி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் துர்காபூரில் செயல்பட்டு வரும் மத்திய எந்திர பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தில்(சிஎஸ்ஐஆர்) நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் கிரேடு III மற்றும் இளநிலை ஸ்டெனோகிராபர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015
பணி: Assistant (General) Grade-III
காலியிடங்கள்: 09
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Finance& Accounts) Grade-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: வணிகவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Stores & Purchase) Grade-III
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35/30 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 20.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதும் திறனும்,  நிமிடத்திற்கு 40/35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Durgapur-Code No:00074-ல் மாற்றத்தக்க வகையில் Central Mechanaical Engineering Research Institute என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cmeri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Controller of Administration, CSIR-Central Mechanical Engineering Research Institute, MahatmaGandhi Avenue, Durgapur-713209, West Bengal
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cmeri.res.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment